திரைச்செய்திகள்

‘ஊரே சேர்ந்து ஓவியாவையும் கெடுத்து வச்சுட்டாங்களே?’ என்று அழுவதா, ‘இப்பவாவது இந்தப்பக்கம் வந்தியே ராசாத்தி’ என்று சந்தோஷப்படுவதா தெரியவில்லை.

அவர் ஹீரோயினாக நடிக்கும் ‘90 எம்.எல்’ படம், முற்றிலுமான அடல்ட் படம்.

சென்சார் வாங்காமல் யு ட்யூபில் வெளியான ட்ரெய்லருக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு.

ஆனால் இப்படத்தின் பெண் இயக்குனர் அனிதா உதிப், இது பெண்களின் பிரச்சனை.

எங்களுக்கும் பிரைவசி இருக்கு என்கிறார். அது மட்டுமா, இந்த படத்தை சென்சார் உறுப்பினர்கள் பாராட்டியதாகவும் அள்ளி விடுகிறார்.

ஒரு பக்கம் ஓவியாவை திட்டித் தீர்த்தாலும் படத்தை வாங்க கோடம்பாக்கத்தில் ஒரே அடிதடியாம். அடப்பாவிகளா?