திரைச்செய்திகள்

சிம்புவின் பிறந்த நாள் சபதம் என்னவாக இருக்குமோ தெரியாது.

ஆனால் அவருக்கு இந்த பிறந்த நாள் அவ்வளவு நல்லபடியாக முடியவில்லை. யெஸ்... ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தியேட்டர்களிலிருந்து மூன்றாவது நாளே தூக்கிவிட்டார்கள்.

இத்தனைக்கும் படம் குப்பை இல்லை. பிறகு ஏன்? சிம்புவும், சீமானும் இணைந்து உருவாக்கும் படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிப்பதாக பேச்சு.

ஆனால் அந்த திட்டத்தையே பேக்கப் பண்ணிவிட்டது லைகா.

இந்தப்படத்தை ஓட விடாமல் தடுத்துவிட்டால், தானாகவே சிம்புவும் சீமானும் திண்ணையை காலி பண்ணிவிட்டு வேறு திண்ணையை தேடிப் போய் விடுவார்கள் அல்லவா? அதற்காகதான் இப்படியொரு குறுக்கு வழி!