திரைச்செய்திகள்
Typography

நயன்தாராவின் ராணி தந்திரத்தில் மேலும் ஒரு ஆணி முளைத்திருக்கிறது.

தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் டாப்போ டாப்பாகி கிடக்கும் அவரது மார்க்கெட் அவரை வைத்து படம் எடுப்பவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், அவர் கேட்கும் சம்பள சதவீதம்தான் இப்போது தக்காளி சட்னி கலருக்கு தோற்றமளித்து கிலியேற்படுத்துகிறது. தமிழில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், நயன்தாராவுக்கு ஒரு சம்பளம் பேசுவார்கள் அல்லவா? அப்போது “இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்படுமா?” என்கிறாராம். ஆம் என்றால், “அதற்கும் ஒரு சம்பளம் கொடுங்க” என்கிறாராம். தமிழில் கூட இவர் குரலில் டப்பிங் பேசுவதில்லை. அப்படியிருக்க, இவரது உழைப்பை துளி கூட பயன்படுத்திக் கொள்ளாத அந்த தெலுங்கு டப்பிங் படத்திற்கு எதற்காக சம்பளம் தர வேண்டுமாம்? இதையெல்லாம் வழிந்து நெ ளிந்து கேட்டாலும், போய்ட்டு வாங்க என்று கூறிவிடுகிறாராம். எலிக் கறி வாங்குறவங்களுக்கு மட்டும்தான் எலிப்பொறி தருவேன்னா எப்படிம்மா? 

BLOG COMMENTS POWERED BY DISQUS