திரைச்செய்திகள்

‘90 எம்.எல்’ படத்திற்கு சக்சஸ் மீட் வைக்கலாம் என்று பேசி வருகிறாராம் அப்படத்தின் இயக்குனர் அனிதா உதீப்.

ஏற்கனவே இலையை பறித்து நரம்பை உருவிவிட்டது மீடியா. இந்த லட்சணத்தில் இன்னொரு முறையும் அவர்களை சந்திக்க வேண்டுமா என்று அறிவுறுத்தி வருகிறார்களாம் அவரது தோழிகள். ஓவியா வராமல் வெற்றி விழா ருசிக்காதே? அவரோ, ‘நடிக்கும்போது தெரியல. ஊரே சேர்ந்து கடிக்கும் போதுதான் தெரியுது எவ்வளவு சிக்கல்ல மாட்டியிருக்கேன்னு?’ என்கிறாராம். சக்சஸ் மீட் நடக்கும். ஆனா மீடியா இல்லாம நடக்கும் என்பதுதான் இப்போதைய தெளிவு!