திரைச்செய்திகள்

விஷால் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்பாரா? மாட்டாரா?

இதுதான் சங்க உறுப்பினர்களின் சுறுசுறு கேள்வியாக இருக்கிறது.

அதற்கு இரண்டு விதமான பதில்களும் நிலவி வரும் நிலையில், விஷாலின் முழு கவனமும் இப்போது நடிப்பு பக்கம் திரும்பிவிட்டதையும் கவனிக்க வேண்டும்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஷால், மேனனின் முந்தைய சிக்கல்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நின்று தீர்க்கிற முயற்சியிலும் இறங்கிவிட்டார்.

டிராபிக்கை கிளியர் பண்ணினால்தானே நம்ம வண்டி முன்னேறும் என்கிற நினைப்பாக கூட இருக்கலாம்.

இது ஒரு புறமிருக்க அரசாங்கமே விஷால் சங்கப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிக்கை தந்ததால் படு அப்செட்.