திரைச்செய்திகள்
Typography

தடையற தாக்க, குற்றம் 23, தடம்... இம்மூன்று படங்களும் அருண்விஜய்யின் நெற்றியில் வெற்றி திலகம் இட்டுவிட்டன.

அதிலும் ‘தடம்’ படத்தின் வெற்றி, அவருக்கு புது தெம்பை வரவழைத்துவிட்டது.

படக்குழுவுக்கு மட்டும் ஒரு கிராண்ட் பார்ட்டி கொடுத்தார் அருண் விஜய்.

அங்கே நடந்ததுதான் அநியாயத்துக்கு அழுகாச்சி.

‘என்னை என் மாமா ஹரி கூட முன்னேற வைக்கல.

பெற்ற அப்பாவே கூட என்னை நம்பி பணம் போட தயங்குனாரு. ஆனால் எப்படியோ போராடி ஒரு இடத்தை பிடிச்சுட்டேன்.

அது போதும்’ என்று அழ ஆரம்பித்துவிட்டாராம் அருண் விஜய். தடம் படத்தின் தயாரிப்பாளரே அருண்தான் என்றும் ஒரு தகவல் இருக்கிறது.

தலை வாசல் திறக்கணும்னா, மலையே குறுக்க வந்தாலும் உதைக்கணும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS