திரைச்செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தன் படத்திற்காக வைத்திருந்த ‘ஹீரோ’ என்கிற தலைப்பைதான் சிவகார்த்திகேயன் படத்திற்காக கொடுத்தார்.

கோலாகலமாக பூஜையும் போடப்பட்டுவிட்டது.

அதே நாளில் ஹீரோ என்ற பெயருடன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கும் பூஜை போட்டார்கள்.

என்னடா புதுக்குழப்பம் என்று விசாரித்தால், ஒருவருக்கு பதிவு செய்த சர்டிபிகேட்டும், இன்னொருவருக்கு வெறும் வெள்ளை பேப்பரில் பணம் பெற்றதற்கான ரசீதும் கொடுத்திருக்கிறதாம் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.

கக்கத்துல குழப்பத்தை வச்சுக்கிட்டு, சங்கத்தில சந்தோஷம் இல்லேன்னா... எப்படிங்க வரும்?