திரைச்செய்திகள்
Typography

மயில் ஆடுனாலும் அதே மாடுலேஷன். மங்கி ஆடுனாலும் அதே மாடுலேஷன் என்று தன் சீரியஸ் முகத்தை துளி கூட மாற்ற தயாராக இல்லை அஜீத்.

தானுண்டு, தன் தொழில் உண்டு என்று ஒதுங்கிப் போகும் அவரை, வாங்க சார் வாங்க என்று அரசியல் கூலிங் கிளாஸ் மாட்ட அலைகிறது ஒரு கோஷ்டி.

எதற்கும் ரியாக்ட் பண்ணுவதில்லை அவர்.

இந்த லட்சணத்தில், ‘திராவிட கட்சிகளின் 40 ஆண்டுகால அரசியலுக்கு முடிவு கட்ட வா தலைவா’ என்று ஓப்பனாக கடிதம் எழுதி உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் இயக்குனர் சுசீந்திரன்.

இந்த லெட்டருக்கு அஜீத் வட்டாரத்திலிருந்து ஒரு சின்ன அசைவு கூட தெரியவில்லை.

அடக்கமா பொங்குனாதான் அல்டிமேட் கறி. அதுக்கு மேல பொங்குனா அடுப்புக்கரி!

BLOG COMMENTS POWERED BY DISQUS