திரைச்செய்திகள்

தன் கல்யாணத்திற்கு பின் ஏகப்பட்ட முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஷால்.

தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்க வேண்டும் அல்லவா? அப்படியே நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கவும் ஒரு முயற்சி நடக்கிறதாம்.

மாமனார் வீட்டுப் பக்கம் இப்படி ஆசைப்பட்டால் மறுக்க முடியுமா மருமகனால்?

இந்த தகவல்கள் எல்லாம் தயாரிப்பாளர் சங்கம் பக்கம் அலசப்படுவதால், அங்கு ஏகப்பட்ட குஷி.

ஏன்? ஒரு முக்கிய போட்டியாளர் தேர்தல் வட்டத்திற்கு வெளியே நிற்கப் போகிறார் என்பதால் ஏற்பட்ட குஷிதான் அது.

அவர்தான் நிற்க மாட்டாரே தவிர அவரது நெருங்கிய நண்பரை நிற்க வைக்கும் எண்ணமும் இருக்கிறதாம் விஷாலுக்கு!