திரைச்செய்திகள்

நிஜமாகவே லேடி சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்பட்டுவிட்டார் நயன்.

தன்னை வைத்து 100 கோடி செலவில் ஒரு படம் எடுக்கப்பட்டால், அது வியாபாரம் ஆகுமா?

அதற்கேற்ற கதையும் கிராபிக்சும் இருந்தால் சுலபமாக அந்த லட்சியத்தை அடைந்துவிட முடியுமா என்றெல்லாம் கணக்குப் போட்டு காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்.

உலகம் முழுக்க இப்படத்தை  வெளியிட்டால் எப்படியிருக்கும் என்கிற அவரது கனவுக்கு உயிர் கொடுக்க ஒரு சில பைனான்சியர்களும் முன் வந்திருப்பதுதான் ஆச்சர்யம்.

நயன்தாரா தேர்வு செய்யப் போகும் அந்த ராஜமவுலி யாரென்பதுதான் கோடம்பாக்கத்தின் ஒரே டவுட்!