திரைச்செய்திகள்

‘அக்னிதேவி’ பட இயக்குனர் கம் தயாரிப்பாளர்களான இருவர் மீதும் போலீசில் புகார் கொடுத்து அவர்களை ஓட விட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் பாபிசிம்ஹா.

அவர்கள் செய்த குற்றம்... இவரை வைத்து படம் எடுத்ததுதான்! இந்த நிலையில் பாபிசிம்ஹாவை அழைத்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு கூட்டம் போட்டது.

அங்கு வந்த பாபிசிம்ஹா காட்டிய தெனாவெட்டில் பேரதிர்ச்சி அடைந்தார்களாம் தயாரிப்பாளர்கள். ‘அவங்க ரெண்டு பேரையும் அழிக்காம விடமாட்டேன்’ என்று கூட்டத்திலேயே பொங்கியிருக்கிறார் பாபி. ‘இப்படிப்பட்ட படங்களில் நடித்ததால் என் ரசிகர்கள்தான் வருத்தப்படுவாங்க’ என்று பாபிசிம்ஹா சொன்னதை கேட்டு பலரும் வாயை அடக்கிக் கொண்டு சிரித்ததுதான் தாறுமாறு மொமென்ட்!