திரைச்செய்திகள்
Typography

நடிகை அமலாபாலை லவ் செய்து திருமணம் செய்து கொண்ட இயக்குனர் ஏ.எல்.விஜய், கட்டிய கையோடு விவகாரத்தும் கொடுத்து அனுப்பிவிட்டார்.

அல்லும் பகலும் நச்சரித்து நச்சரித்து இந்த விவாகரத்தை வாங்கிக் கொண்டு கிளம்பிய அமலாபால், அதற்கப்புறமும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்வது இறைவனின் திருச்சபையில் இன்பம் ஒலிக்கும் மந்திரம்தான்.

அவர் போனாலென்ன? டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் சாய் பல்லவியை தன் அடுத்த மனைவியாக்கிக் கொள்ளப் போகிறாராம் ஏ.எல்.விஜய்.

இன்டஸ்ட்ரியில் கண்ணும் காதும் வைத்தது போல பரவி வரும் இவ்விஷயம் கடைத்தெருவுக்கு வர எவ்ளோ நேரம் பிடிக்கும்? வந்திருச்சு... ஆனால் ஏ.எல்.விஜய்யிடம் கேட்டால், அதெல்லாம் ரூமர்ங்க என்கிறார்.

இப்படிதான் அமலாபால் லவ் பற்றி கேட்டபோதும் பதிலளித்தார் என்பதால், சூடத்தை அணை. சத்தியத்தை பேக் பண்ணு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்