திரைச்செய்திகள்

பாலாவை அசிங்கப்படுத்தாத குறையாக கழட்டிவிட்ட ‘வர்மா’ படக்குழு, அடுத்த இயக்குனரை வைத்து அதே படத்தின் ஷுட்டிங்கை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் கடும் மன உளைச்சலோடு இதை கவனித்த பாலா, அடிச்சா சிக்சர்தான் என்று கிரவுண்டுக்குள் புகுந்து கம்பு சுற்ற ஆரம்பித்திருக்கிறார்.

தன் ஆஸ்தான ஹீரோ சூர்யாவை அழைத்து “கண்டிப்பா டேட்ஸ் வேணும்” என்று கேட்க, அவரும் குரு மரியாதையோடு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது சூர்யாவின் சொந்தப்படமாக இருக்கும் என்று தெரிகிறது. குடும்ப நண்பர் என்கிற அந்தஸ்தை சூர்யா காப்பாற்றிவிட்டார். பாலாவும் அப்படி செய்ய வேண்டுமே?