திரைச்செய்திகள்
Typography

நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ஐரா’ படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது.

உலக வரலாற்றிலேயே மூன்று நிமிஷங்களில் முடிந்த பிரஸ்மீட் இது ஒன்றாகதான் இருக்கும்.

பிரஸ்மீட்டுகளில் கலந்து கொள்வதில்லை என்பதை கொள்கையாக வைத்திருப்பதால் நயன் ஆப்சென்ட்.

அதற்கப்புறம் படத்தில் நடித்த ஒரு நபர் கூட அங்கு வந்திருக்கவில்லை.

(அழைத்தால் வந்திருப்பார்களோ, என்னவோ?) தயாரிப்பாளரும் வரவில்லை.

இயக்குனர் மட்டுமாவது நிலைமையை சமாளிப்பார் என்று எதிர்பார்த்தால், அவரும் நாலு ஸ்பூனில் வார்த்தைகளை அளந்து வைத்து விட்டு உட்கார்ந்துவிட்டார்.

இதனால் படு பேஜார் ஆனார்கள் சேட்டிலைட் சேனல்காரர்கள்.

வொய்? ஃபுட்டேஜ் கிடைக்கும்னு ஓடி வந்தா இப்படி வேஸ்டேஜ் ஆகிருச்சே நேரமெல்லாம்? இதுதான் அவர்களின் பிரச்சனை! ஐரா என்றால் யானை என்று பொருளாம். யானை என்னைக்குப்பா பேசுச்சு?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்