திரைச்செய்திகள்

 கே.ஜே.ஆர் ராஜேஷ் நயன்தாராவின் நண்பர். இவர் தயாரித்த ‘அறம்’ படத்தின் பப்ளிசிடிக்கு வரலாறு காணாத வகையில் ஒத்துழைப்பு கொடுத்த நயன் தியேட்டர் விசிட் அடித்ததெல்லாம் கல்வெட்டு.

அப்படியிருக்க... ஐரா விஷயத்திலும் அப்படி நடக்குமல்லவா? அங்குதான் வண்டி ஸ்லிப்! இந்த முறை எந்த புரமோஷனுக்கும் வருவதற்கு அவர் தயாரில்லை என்று கூறிவிட்டார் நயனின் காதலர் விக்னேஷ்சிவன். சுவிட்ச் இவர் கையில் இருக்க... பல்ப் தன்னிச்சையாக எரியாதல்லவா? ஐரா என்றால் இந்திர லோகத்து யானையாம். இருக்கட்டுமே... சின்னத்தம்பி யானையாட்டம் சீரழிய விட்டுட்டாரே விக்னேஷ்சிவன்?