திரைச்செய்திகள்
Typography

சில தினங்களுக்கு முன் ஒரு வதந்தி. ராகவேந்திரா மண்டபத்திற்குள் இயங்கி வந்த ரஜினி மக்கள் மன்ற அலுவலகம் இழுத்து மூடப்பட்டுவிட்டது என்பதுதான் அது. வைகை ஆற்று வெள்ளம் போல சரசரவென பாய்ந்து பரவி விட்ட அந்த வதந்தி, பிறகு சந்தேகக் கணைகளாக மாறியதுதான் கொடுமை.

பத்திரிகையாளர்கள் பலரும் போன் அடித்து, அப்படியா விஷயம்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். முதல்ல இப்படியொரு பொய்யை பரப்பியவன் எவன்? என்று பொறி வைத்து தேடுகிற அளவுக்கு போய் விட்டது மண்டப வட்டாரம். எப்படியோ... அது வதந்திங்க என்று புரிய வைப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்கள். முன்பெல்லாம் ரஜினி பேசினால்தான் நியூஸ். இப்போ அலுவலகத்தின் ஜன்னல் மூடி திறந்தால் கூடவா நியூஸ்? அட போங்கப்பா...

BLOG COMMENTS POWERED BY DISQUS