திரைச்செய்திகள்
Typography

கடந்த சில வாரங்களாகவே தமிழ்சினிமாவின் டாப் பைனான்சியர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

அதிலும் மோடி முதல் எடப்பாடி வரை இழுத்துப்போட்டு மொத்திய எல்.கே.ஜி என்ற அரசியல் படத்தை தயாரித்த ஐசரி கணேஷுக்கும் ஆயிரம் நெருக்கடியை கொடுத்திருக்கிறது ஐடி. கிட்டதட்ட முன்னூறு கோடிக்கு கணக்கு வரவில்லை என்று காதை கடிக்கிறார்கள்.

ஏன் இப்படியொரு ரெய்டு? எலக்ஷன் நிதிக்காக  கட்சிக்காரர்கள் கதவை தட்டிய இடங்களில் இவர்களின் குடிசைகளும்(?) அடக்கமாம். யார் யாரெல்லாம் கையை விரித்தார்களோ, அவர்களுக்குதான் ஆப்பு!

BLOG COMMENTS POWERED BY DISQUS