திரைச்செய்திகள்

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘சிந்துபாத்’ படத்தைதான் நம்பியிருக்கிறார் அஞ்சலி.

ஒருவேளை இந்த வண்டியும் பஞ்சர் ஆகிவிட்டால் பேசாமல் மூட்டை முடிச்சை கட்டிவிடுவது என்பதுதான் அவரது ஒரே முடிவாக இருக்குமாம். இந்த விரக்தியை எப்படியோ மோப்பம் பிடித்த தேசிய கட்சி ஒன்று, வாம்மா அரசியலுக்கு என்று அழைத்திருக்கிறது.

சிந்துபாத் வரட்டும். யோசிக்கிறேன் என்று பதிலளித்த அஞ்சலிக்கு பல்ப் மின்னுகிற அளவுக்கு ஆஃபர் வழங்கப்பட்டதாம்.

அதாவது இந்த தேர்தலுக்கே பிரச்சாரத்திற்கு வந்தால், எதிர்காலத்தில் நல்ல இடம் வழங்கப்படும் என்பதுதான் அது. சிந்து பாத்தா? தீவிர அரசியலா? யோசிக்க முடியாமல் காய்கிறது அஞ்சலியின் அறிவு!