திரைச்செய்திகள்

நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சவசவ திரைக்கதை. வளவள டயலாக்குகள், நகராத படம் என்று பல மைனஸ்கள் இருந்தாலும், நயனை பொருத்தவரை தன் வேலையை சிறப்பாக செய்து முடித்திருந்தார்.

இந்தப்படத்தை ரிலீசுக்கு முன்பு பார்த்து ஆஹா ஓஹோ என்று தப்புக்கணக்குப் போட்ட தயாரிப்பாளர் ராஜேஷ், இயக்குனர் சர்ஜுனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.

வெளிவந்த பின்புதான் படம் பிளாப் என்றே புரிந்ததாம் அவருக்கு. கொடுத்த காரை கேட்பது நியாமில்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டார்.