திரைச்செய்திகள்

நயன்தாராவை கூலாக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது உளறிவரும் விக்னேஷ்சிவன், அண்மையில் சிக்கியது ‘கொலையுதிர் காலம்’ படத் தயாரிப்பாளர் மதியழகனிடம்.

அந்தப்படம் இன்னும் முழுமை அடையவில்லை என்று ட்விட்டரில் கூறியிருந்தார் விக்கி.

நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிற படம் பற்றி, விக்கியே சொன்ன பிறகு விசாரிப்பானேன்? படம் அல்ப சொல்ப அளவோடுதான் வெளிவருகிறது என்ற முடிவுக்கு வந்துவிட்டது வியாபார வட்டாரம்.

படத்தை வாங்கிக்கலாம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப். இதில் சுமார் 12 கோடி நஷ்டமாம் மதியழகனுக்கு. விக்கிக்கு எதிராக கோர்ட்டுக்கு போகவிருக்கிறார் அவர்.