திரைச்செய்திகள்
Typography

தமிழ்சினிமாவின் தற்போதைய பிஸியோ பிஸி நடிகர் யோகிபாபுதான்.

யார் கேட்டாலும் இவ்ளோ இருந்தா ஓ.கே என்று சொல்லி ஒரு பெருந்தொகையை பெற்றுக் கொள்ளும் அவர், ராப்பகலாக கண் விழித்து நடித்துக் கொடுப்பதெல்லாம் ‘கொட்டும்போதே புடிச்சுக்கோ...’ பாலிஸி.

ஆனாலும் இந்த பாலிஸியால் அதிகம் பாதிக்கப்படுவதும் அதே படங்கள்தான். யோசிக்கக் கூட நேரமில்லாமல் வறண்ட காமெடியை மட்டுமே தர முடிகிறது அவரால்.

இந்த லட்சணத்தில் இன்னொரு சங்கடம். ரஜினியின் தர்பார் படத்திற்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

மும்பைக்கு பறந்துவிட்ட அவருக்காக சுமார் 11 படங்கள் காத்திருக்கின்றன. ஏன்? டப்பிங் பேச வேண்டுமாம். ‘மனுஷன் என்னைக்கு வந்து என்னைக்குப் பேசி...?’ என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்