திரைச்செய்திகள்
Typography

திருட்டு விசிடியை ஒழிக்கும் முயற்சியில் ரெமோ படக்குழு களம் இறங்கி உள்ளது. 

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள ரெமோ படம் வரும் அக்டோபர் 7-ந் தேதியன்று வெளியாக உள்ளது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் திருட்டி விசிடி வெளியாகவிடக்கூடாது என்பதில் இப்படக்குழுவினர் தீவிரமாக இருக்கின்றனர்.அதன் முதற்கட்டமாக வரும் அக்டோபர் 7-ந் தேதி ‘ரெமோ’ படம் தமிழ்நாட்டில் வெளியான பிறகே, இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அதுவும் தமிழ்நாட்டில் முதல் காட்சி முடிந்த பிறகுதான் அங்கு வெளியிடப் போகிறார்களாம்.  

பொதுவாக, தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாகவே வெளிநாட்டில் வெளியாகிவிடும். இதனால், வெளிநாடுகளில் இந்த படத்தை பார்ப்பவர்கள் திருட்டுத்தனமாக படத்தை வீடியோ எடுத்து, அதை இணையதளங்களில் பரப்பி விடுகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் படம் வெளிவருவதற்கு முன்பே, அப்படத்தை பற்றிய நெகட்டிவான விமர்சனங்கள் எழும்பி விடுகிறது.  

தற்போது ரெமோ படக்குழு எடுத்துள்ள புதுமுடிவு அந்த படம் இணையதளங்கள் மூலமாகவும், திருட்டி விசிடி மூலமாகவும் வெளியாவது தடுக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்