திரைச்செய்திகள்

இதைதான் திமிரு என்கிறது கோடம்பாக்கம். சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ‘ரெமோ’ என்று பெயர் வைக்கும் போதே, “அதெப்படிப்பா இந்த படத்துக்கு டாக்ஸ் ஃபிரீ கிடைக்கும்?

தமிழ்ல பேர் வச்சாலே தர மாட்டோம்னு சொல்ற கவுருமெண்டு, இந்த தலைப்புக்கு பப்பர்மென்ட் கொடுத்து பரவசப்படுத்தவா செய்யும்?” இப்படியெல்லாம் சிவகார்த்திகேயனின் காதுக்கே கேட்கிற அளவுக்கு பேசிய மீடியாவை பெரும் நகைப்புடன் கடந்தார் அவர். படம் முடிந்து வியாபாரம் பேசி வரும் இந்த நேரத்தில்தான், “அட ஆமாம்ல?” என்று எண்ணம் வந்ததாம் அவருக்கு. ‘ரெங்கநாதன் என்கிற மோகனா’ என்பது மாதிரி ஒரு பெயரை வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம். சர்வ இடத்திலும் சமாளிப்பிகேஷன்? இதுதாண்டா உலகம். இருந்தாலும் கம்பெனி பக்கம் விசாரித்தால், அந்த விஷயத்தில் உண்மையில்லை என்ற தகவலும் வருகிறது. எல்லாமே கடைசி நேர மாற்றத்திற்கு உட்பட்டதுதானே?