திரைச்செய்திகள்

ரஜினி, அஜீத், விஜய் மூவருமே கூட இந்த விஷயத்தை கேள்விப்பட்டு இந்நேரம் ஜர்க் ஆகியிருப்பார்கள்.

ராகவேந்திரா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 திரைப்படத்தின் கலெக்ஷன் அப்படி! இதுவரை அப்படம் ஓடி கலெக்ஷன் செய்த தொகை தாறுமாறு என்கிறது இன்டஸ்ட்ரி. தயாரிப்பாளரின் பங்காகவே இதுவரை 40 கோடி வந்திருக்கிறதாம். இதிலிருந்து ஏழு மடங்கு கூட்டிக் கொள்ளுங்கள். அதுதான் உண்மையான வசூல். மே மாத விடுமுறை. குழந்தைகளின் கூட்டம் இவையெல்லாம்தான் காரணம் என்றாலும், மேற்படி முன்னணி நடிகர்களின் படங்களே இந்த வசூலை தொட வேண்டும் என்றால், தலைக்குப்புற விழுந்து தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க அசால்ட் ஆறுமுகம் போல அடித்து பின்னுகிறாரே லாரன்ஸ்?