திரைச்செய்திகள்
Typography

விஜய் 63 படத்திற்கு அட்லீ கொடுத்த பட்ஜெட் தொகை இப்பவே காலியாகிவிட்டதாம்.

ஆனால் படம் முப்பது சதவீதம்தான் எடிட் போக கைக்கு வந்திருக்கிறது. அப்படியிருக்க... மீதி இன்னும் எத்தனை கோடிகளை விழுங்குமோ என்கிற அச்சம் வந்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனத்திற்கு. தினந்தோறும் சண்டை சச்சரவு என்றே வண்டி நகர்வதால், அவ்வளவு பேரின் கோபமும் விஜய் மீது திரும்பியிருப்பதுதான் ஷாக். ஏன்? அவர்தானே அட்லீயை சிபாரிசு செய்தவர். அது மட்டுமல்ல, பட்ஜெட்டுக்குள் படமெடுப்பார் என்று உத்தரவாதமும் கொடுத்திருந்தாராம். ஆனால் விஜய்யின் முகத்திற்கு நேரே பஞ்சாயத்தை கூட்ட முடியாமல் தவியாய் தவிக்கிறதாம் பட நிறுவனம். எலியோட பல்லுல இன்னும் எத்தனை கட்டிங் பிளேயரோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்