திரைச்செய்திகள்

விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் செட்டுகள் எரிந்து நாசமாகிவிட்டதாக செய்திகள் கசிகின்றன.

நிஜத்தில் நடந்தது என்ன? அடப்போங்க அப்ரசண்டுகளா... அவ்வளவும் பொய். மெர்சல் சமயத்தில் போடப்பட்ட செட்டுகள்தான் அவை.

அதற்கப்புறம் அதே செட்டுகளுக்கு பெயின்ட் அடித்து லேசான திருத்தங்கள் செய்து வேறு வேறு படங்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தார்களாம்.

அவைதான் திடீர் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமாகியிருக்கிறது. பின்னி மில்லில் விஜய் 63 செட்டுகள் எதுவும் இல்லை என்பதுதான் நிஜம்.

ஈவிபி. செட்டில்தான் இந்தப்படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது. மெர்சலாகியிருப்பது மீடியாவா, அந்த பழைய செட்டா? பரபரப்பு இல்லேன்னா சொந்த மண்டையை கூட பற்றி வைத்துக் கொள்வார்கள் போலிருக்கு!