திரைச்செய்திகள்
Typography

விஜய்சேதுபதி மாதிரியான கோக்கு மாக்கான ஆள் உலகத்திலேயே இல்லை போலிருக்கிறது.

ஒரு டைரக்டர் தோல்விப்படம் கொடுத்தால், அவரை முன் ஜென்மத்தில் கூட பார்த்தது இல்லை என்பது போல நடந்து கொள்வார்கள் ஹீரோக்கள். ஆனால் விஜய் சேதுபதி முற்றிலும் புது மாதிரி. அதே இயக்குனர் மீண்டும் ஒரு நல்லக்கதை சொன்னால், கால்ஷீட் கொடுத்துவிடுவார். சமீபத்தில் விஜய் சேதுபதியின் இமேஜில் விளக்கெண்ணை தடவிய ஜுங்கா என்ற படத்தின் இயக்குனரான கோகுல் மீண்டும் ஒரு கதை சொன்னாராம். சூப்பரு... என்று வாய் மலர்ந்த வி.சே பட வேலைகளை ஸ்டார்ட் பண்ண சொல்லியிருக்கிறார். ‘தாமரை மலர்ந்தே தீரும்’னு நம்புறது ரெண்டே பேர்தான். ஒருவர்... தமிழிசை. இன்னொருவர் வி.சே!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்