திரைச்செய்திகள்

சமீபத்தில் காமெடி நடிகர் சூரி ஒரு வீடியோ பதிவை அவரது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தார்.

கோவையிலிருந்து பழனி வரும் வழியில் நடுரோட்டில் ஒரு கொள்ளிவாய் பிசாசு நிற்பது போன்ற வீடியோ அது. பதறும் சூரி, காரின் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு அந்த பிசாசின் மீது காரை ஏற்றிவிட்டு தப்பித்து வருவது போல அமைந்திருக்கிறது அது. இது நிஜம்தானா, அல்லது ஏதாவது படத்தில் வரும் காட்சியா? இந்த சந்தேகத்தில் சூரியை விரட்டியது நிருபர் கூட்டம். அவர்களுக்கு கடைசி வரை ஏமாற்றம்தான். யார் லைனுக்கும் வரவில்லை சூரி. “அவ்ளோ பெரிய ஆளாப்பா நீ?” என்று நிருபர்கள் டென்ஷன் ஆனது ஒரு பக்கம் இருக்கட்டும்.... சூரியின் இந்த பதிவு லட்சத்தை தாண்டி ஷேர் ஆகிக் கொண்டிருப்பதுதான் கொடுமை. ஜனங்களின் மனசை குழப்பி நாட்டில் பதற்றத்தை வரவழைத்துவிட்டார் என்று யாராவது டிராபிக் ராமசாமிகள் வழக்கு போடுவதற்குள், ஒரு விளக்கத்தை போட்ருங்க சூரி.