திரைச்செய்திகள்

விஜய்க்கும் சொந்தப்பட ஆசை வந்திருக்கிறது. இப்போது தமிழ்சினிமா இருக்கிற சூழலில் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக ‘காலி’யாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைக்கு ஒசந்த சம்பளம், தாறுமாறான தயாரிப்பு செலவு, அளவுக்கு மீறிய வரி, வாங்கிய கடனுக்கு வட்டி இவற்றோடு எந்த வகையிலும் வசூல் விபரங்கள் டேலி ஆகாத காரணத்தால், பல தயாரிப்பாளர்கள் போர்வையை மூடிக் கொண்டு படுத்தே கிடக்கிறார்கள். இந்த சூழலில் இப்படியொரு முடிவெடுத்திருக்கும் அவரை எச்சரிக்கவும் செய்கிறார்களாம் அவரது நலன் விரும்பிகள். வேதாளமே விழுந்தால் கூட எழுந்திருக்க இயலாத இந்த பாதாள கிடங்கு உங்களுக்கு தோது படாது சாமீய். சொன்னா கேளுங்க!