திரைச்செய்திகள்

குறுக்கு வழியில் நுழைந்து சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை தந்திரமாக பெற்றவர் ஞானவேல்ராஜா.

மிஸ்டர் லோக்கல் என்ற ஜனரஞ்சகமான பெயரில் படத்தை உருவாக்கினாலும், ரிலீஸ் ஜனரஞ்சமாக இருக்காது போல. ஏன்? ஞானவேலுக்கு முந்தைய படங்களில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சமாச்சாரங்களால் பல கோடி டெபிசிட்! கிட்டதட்ட ஒன்பது கோடி ரூபாயை எண்ணி வைத்தால்தான் மிஸ்டர் லோக்கல் திரைக்கு வரக்கூடிய சூழல். கதவை தட்டிய இடத்திலெல்லாம் கை விரிப்புதான் பதில். முன்னணி பைனான்சியர் ஒருவர், “நடிகர் சூர்யாவை வைத்து நீங்க எடுக்கப் போற படத்தை வச்சுதானே கேட்கிறீங்க. அந்த 9 கோடி பைனான்சுக்கு சூர்யாவையே கையெழுத்துப் போடச் சொல்லுங்க” என்றாராம். ஒருவேளை படம் குறித்த நேரத்தில் திரைக்கு வராவிட்டால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.