திரைச்செய்திகள்

விஜய் 64 படத்தை ‘மாநகரம்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதற்கான அட்வான்ஸ் தொகை கைமாறிவிட்டது. இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் அனிருத்.

விஜய்க்கு கதை சொல்லி காத்திருப்போர் லிஸ்ட்டில் புதுபுது இளைஞர்கள்தான் இடம் பிடித்திருக்கிறார்களாம். ஏற்கனவே முட்டி மோதிய மோகன் ராஜாவை முதல் சந்திப்பிலேயே ஸாரி என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் விஜய். இது ஒருபுறமிருக்க கனா படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் தனி கவனத்தை பெற்ற அருண்ராஜா காமராஜ் கூட விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். விரைவில் நல்ல செய்தி வரக்கூடும்.