திரைச்செய்திகள்

எங்கு போனாலும் கூடவே லக்கேஜ் போல தொற்றிக் கொள்ளும் விக்னேஷ் சிவனுக்கு ‘கொஞ்ச நாள் கூடவே சுற்றாமல் வேலையை பாருங்க’ என்று கட்டளை இட்டிருக்கிறார் நயன்தாரா.

லைகா நிறுவனத்திற்காக படம் இயக்கவிருக்கும் விக்கி, இந்த ராஜ(ணி) கட்டளைக்குப்பின் சற்றே தொழில் பக்கம் திரும்பியிருக்கிறார். தன் உதவி இயக்குனர்களுடன் கதை விவாதத்தை மீண்டும் சுறுசுறுவாக்கிவிட்டார். அங்கேயும் ஒரு வேடிக்கை. எப்பவாவது இந்த டிஸ்கஷன் ஏரியா பக்கம் விசிட் அடிக்கும் நயன்தாரா அருகிலிருக்கும்போது ஒரு டைப்பாகவும், அவரில்லாத நேரத்தில் வேறொரு டைப்பாகவும் இருக்கிறாராம் விக்கி. ‘இவரு பேசாம நடிக்க போயிருக்கலாம்...’ என்று சிரிக்கிறது உ.இ.குழு!