திரைச்செய்திகள்

விஜய் 63 படத்திற்கு இன்னும் பெயர் கூட வைக்கப்படவில்லை.

அதற்குள் விஜய் 64 படத்தை பற்றிய செய்திகள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டன. அந்தப்படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதே கூட பழைய செய்தியாகிவிட்டது.

இப்போது புது அப்டேட் ஒன்று. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஜய்யின் நெருங்கிய உறவினரான பிரிட்டோவாக இருந்தாலும், இணைத்தயாரிப்பாளர்களாக தனது மேனேஜர் ஜெகதீஷையும், அசுரன், 96 போன்ற படங்களை தயாரித்த லலித்தையும் நியமித்திருக்கிறாராம் விஜய். இந்த லலித், விஜய்யின் மூன்று கல்யாண மண்டபங்களையும் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.