திரைச்செய்திகள்
Typography

தானா சேர்ந்த கூட்டம், சிங்கம் 3 படங்களின் தாறுமாறான தோல்விக்கு அப்புறம் கதை கேட்கிற விஷயத்தில் கெடுபிடி கோவலன் ஆகிவிட்டார் சூர்யா.

காப்பான், என்.ஜி.கே, சூரரை போற்று ஆகிய மூன்று படங்களில் அவர் காட்டி வருகிற அக்கறையும் அதீத உழைப்பும் இனி ஒரு தோல்விக்கு இடம் தர மாட்டேன் என்பதை போல இருக்கிறது.

பட்... அந்தப்படங்கள் வெளியாகி அவர் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வரைக்கும் ஒரு கதையையும் கேட்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

ஆனால் க்யூவில் நிற்கும் தயாரிப்பாளர்கள் விட்டால்தானே? தினந்தோறும் அவரை நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்