திரைச்செய்திகள்
Typography

உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாரூக் கான் 8வது இடத்தில் உள்ளார் என்று, அமெரிக்க ஃபோர்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் படி நடப்பாண்டில் அதிக சம்பளம் அதாவது 400 கோடி ரூபாய் பெற்று முதலிடத்தில் உள்ளார் பிரபல குத்துச் சண்டை வீரரும், நடிகருமான ராக் என்று அழைக்கப்படும் டிவைன் ஜான்சன். இதே போல நடப்பாண்டில், 221 கோடி ரூபாய் சம்பளம் பெற்று ஷாரூக் கான் 8வது இடத்தில் உள்ளார் என்றும், 160 கோடி ரூபாய் பெற்று அக்ஷய் குமார் 10வது இடத்தில் உள்ளார் என்றும், 140 கோடி ரூபாய் பெற்று சல்மான் கான் 14வது இடத்தில் உள்ளார் என்றும் அந்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. 

அகில இந்திய சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 130 கோடி ரூபாய் சம்பளம் பெற்று 18வது இடத்தில் உள்ளார் என்று தகவல் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS