திரைச்செய்திகள்

புத்தன் போதி மரத்தடியில் ஒதுங்கியதைப் போல ஒரு நிகழ்வுதான் ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்ததும்!

எலி மாமா என்று சிறுவர் சிறுமியர் அழைப்பதால் உள்ளம் பூரித்துக் கிடக்கிறார் அவர். சினிமாவில் அவர் செய்த வில்லத்தனங்களையெல்லாம் ஒரு பெரிய அழி ரப்பர் கொண்டு அழித்தது போல ஆகிவிட்டது மான்ஸ்டர் தந்த பாசிட்டிவ் பார்வை. இனிமேல் வில்லன் கேரக்டர்களுக்கு குட் பை சொல்லிவிட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கலாமே என்று முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால் குனிஞ்சு போனாலும் கூப்பிட்டு வச்சு குட்டி பழகுற ஏரியாவாச்சே? இயக்குனர்களின் மனசு என்ன பண்ண காத்திருக்கோ?