திரைச்செய்திகள்

தமிழ்சினிமாவில் இன்றைய டாப் இயக்குனர்களில் ஒருவரான ஷங்கரை, ‘அவருக்கு என்ன தெரியும்?’ ரேஞ்சில் வடிவேலு கூறியிருப்பதுதான் ஷாக்.

இன்று ரெட் போடப்பட்டு, வேறு புதிய படங்களில் நடிக்க முடியாதளவுக்கு நெருக்கப்பட்டுவிட்டார் அவர். இதற்கெல்லாம் காரணம் ஷங்கர் தயாரித்து சிம்புதேவன் இயக்குவதாக இருந்த இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட பஞ்சாயத்துதான். இதில் கோபமான வடிவேலு, “ஷங்கர் தன் படங்களில் கிராபிக்சை பயன்படுத்தி ஜெயித்தவர். அதை தவிர காமெடியை பற்றி அவருக்கு என்ன தெரியும்?” என்று பிரபல யு ட்யூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்திருக்கிறார். அப்புறம்? ஷங்கர் சும்மாயிருந்தாலும், அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். பத்த வச்ச அடுப்புல மொத்த வெடியையும் அள்ளிப் போட்ட மாதிரி ஏரியாவில் ஒரே காச் மூச்!