திரைச்செய்திகள்

தனது படம் தோல்விதான் என்று அப்படம் வெளியான ரெண்டாவது வாரமே ஒப்புக் கொள்கிற துணிச்சல் எந்த ஹீரோவுக்கும் வராது.

சிவகார்த்திகேயன் ‘மிஸ்டர் லோக்கல்’ தோல்விப்படம்தான் என்று கூறியபோது கைதட்டாத விரல்கள் இல்லை. “இனிமே கற்பனைக்கும் எட்டாத கதைகளில் நடிக்க மாட்டேன். நம்ம வாழ்க்கையில நடந்த கதைகளில்தான் நடிப்பேன்” என்றும் உறுதிமொழி கொடுத்தார். பால் வற்றிய பிறகு கன்னுக்குட்டிய அவுத்துவிட்டு என்ன பிரயோஜனம்? சிவகார்த்திகேயனின் நான்காவது தோல்விப்படம் என்பதால், அவரது வியாபாரம்தான் படு சறுக்கலுக்கு ஆளாகிவிட்டதே?