திரைச்செய்திகள்
Typography

கிளி சீட்டெடுப்பது போல படக்கென மூக்கை நீட்டி, பச்சக் பச்சக் என படங்களை எடுத்துத் தள்ளுவது இயக்குனர் ஏ.எல்.விஜய்தான்.

மாதத்திற்கு ஒரு படம் என்கிற அளவுக்கு புது புது படங்களாக ரிலீஸ் செய்யும் ஏ.எல்.விஜய், அதில் ஒன்று கூட ஒடுவதில்லையே என்று கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் தனது மகன் துருவ்வின் இரண்டாவது படத்தை இயக்குகிற பொறுப்பை ஏ.எல்.விஜய்யிடம் ஒப்படைத்திருக்கிறார் விக்ரம். இந்தாளுக்கு மட்டும் எப்படி கலர் கலரா பல்ப் எரியுது என்று விஜய் குறித்து கவலைப்படும் இன்டஸ்ட்ரி இந்த தகவலை அறிந்த நாளிலிருந்தே வயிற்றெரிச்சல், மற்றும் தலைச்சுற்றலுக்கு ஆளாகியிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS