திரைச்செய்திகள்
Typography

உலகத்தின் வயிற்றெரிச்சலை ஒரே பக்கத்தில் திருப்புகிற ஆற்றல் விக்னேஷ்சிவனுக்கே உண்டு.

தானும், தன் காதலி நயன்தாராவும் ஏதேன்ஸ் நகரத்திலிருக்கும் தேனிலவு ஸ்பாட்டுக்கு செல்கிற புகைப்படத்தை வெளியிட்டு கோடம்பாக்கத்தின் கும்மிருட்டை இன்னும் அடர்த்தியாக்கிவிட்டார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்திற்கு கீழே சொல்லொணா ஆத்திரத்தோடு கமண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள். உனக்கு வேற வேலையே இல்லையா? இப்படி ஊர் ஊரா சுத்துறீயே, படம் டைரக்ட் பண்ணுற எண்ணம் இல்லையா என்று நாகரீகமாக கேட்கும் ரசிகர்கள், இன்னும் எல்லை மீறி பேசுவதும் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த பதில்களை கேட்டாலும், ஓட்டல் பில், பிளைட் டிக்கெட் இவற்றையெல்லாம் கூட படமாக வெளியிட்டு வெறுப்பேற்றி வருகிறார் விக்கி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்