திரைச்செய்திகள்
Typography

‘நாந்தான் தமிழ்சினிவோட சவ்கிதார்’ என்று நினைத்துக் கொண்டிருந்த இயக்குனர் பாலாவுக்குதான் எத்தனையெத்தனை சோதனை?

மீண்டும் தன்னை சூப்பர் இயக்குனர் என்று நிரூபிக்க படாத படவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார் அவர். வர்மா திரைப்படத்தை வம்படியாக பறித்து குப்பைக்கு அனுப்பிய விக்ரம் அண் கோ மீது கோபத்திலிருக்கும் பாலா, அடுத்த படத்தை துவங்க எடுத்த முயற்சிகள் அத்தனைக்கும் இழுபறியே முடிவு. அதர்வா- ஆர்யா இணைந்து நடிக்கும் ஒரு படத்தை பிளான் பண்ணிய பாலா, அதர்வாவை ஓ.கே செய்துவிட்டு ஆர்யாவை அழைத்தாராம். “நான் ஏகப்பட்ட கடன்ல இருக்கேன். உங்ககிட்ட வந்து வருஷக்கணக்குல சீரழிய முடியாது” என்று கூறிய ஆர்யா, “வருஷத்துக்கு நாலு படமாவது நடிச்சாதான் வண்டி ஓடும்” என்று கூறிவிட்டாராம். குடும்பஸ்தன் ஆன பின் குழப்பத்திற்கு வேலையில்லையே? அதான் இப்படி!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்