திரைச்செய்திகள்

தமிழ்சினிமாவுக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கும் அப்படியொரு ‘நான் சிங்க்!’ அவர் நடித்த எந்த தமிழ் படங்களும் நாலு நாள் கூட ஓடியதில்லை.

இந்த லட்சணத்தில் சுமார் ஒன்றரை கோடி சம்பளம் கொடுத்து அவரை புக் பண்ணி வருகிறார்கள் ஹீரோக்கள். படத்தை தெலுங்கிலும் நல்ல ரேட்டுக்கு தள்ளிவிடலாம் என்கிற ஒரே நோக்கம்தான் இதற்கெல்லாம் காரணம். என்றாலும், ரகுலின் சென்ட்டிமென்ட்டை இனியும் தொடர முடியாது என்கிற நிலைக்கு தள்ளிவிட்டுவிட்டது என்.ஜி.கே படத்தின் தோல்வி.  மண்ணு சுவத்துல ஓவியம் வரைஞ்சு அது பக்கத்துல மாட்டையும் கட்டி வச்ச மாதிரி இருந்த ரகுலின் வரவு இதோடு ஒழிந்ததில் பலருக்கும் நிம்மதி!