திரைச்செய்திகள்
Typography

தமன்னாவின் கடைசி நம்பிக்கையாக இருந்த தேவி 2 கன்னாபின்னவென்று தோல்வி அடைந்துவிட்டது.

தெலுங்கு ஃபீல்டு கைவிட்ட நிலையில் இந்த தேவியை நம்பியிருந்தவருக்கு இந்த தோல்வி செய்தி கடும் மன உளைச்சலை ஏற்படுத்தினாலும், நம்பிக்கையை விடவில்லை அவர். தனது பேவரைட் இயக்குனரான சீனு ராமசாமியிடம் மீண்டும் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். ஆச்சர்யம் என்னவென்றால், விஜய் சேதுபதியை வைத்து விரைவில் படம் இயக்கப் போகும் சீனு, “எதுக்கும் ஹீரோட்ட பேசிட்டு வர்றேம்மா” என்று கூறியிருக்கிறார். கூரையை பிரிக்கக் தெரிந்த தமன்னாவுக்கு குழவியை உருட்டத் தெரியாதா என்ன? அடுத்த போன் வி.சேவுக்குதான் அடித்தாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS