திரைச்செய்திகள்
Typography

பட அதிபரும் விஜயா கம்பைன்ஸ் உரிமையாளருமான வெங்கட்ராம ரெட்டியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த முன்னணி ஹீரோக்கள் யாரும் போகவில்லை.

இத்தனைக்கும் அஜீத், விஜய், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து படம் எடுத்தவர் அவர். இந்த விஷயத்தை முணுமுணுப்பாக கிளப்பிய ஊடகங்கள், மேற்படி ஹீரோக்களுக்கு டென்ஷனை ஏற்றிய கதையும் நடந்தது. இதையடுத்து ஊடகங்களுக்கு ஒரு தகவலை கசிய விட்டார்கள் அஜீத் தரப்பில். “சார் வெங்கட்ராம ரெட்டியின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்” என்று. ஆனால் இன்று வரை அந்த சம்பவம் நடக்கவே இல்லை. வேர் முக்கியமில்ல... விளைச்சல்தான் முக்கியம்னு நினைக்கிற ஹீரோக்கள்தான் மனிதம் பற்றி பக்கம் பக்கமாக பேசுகிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS