திரைச்செய்திகள்
Typography

தமிழ்சினிமாவின் டாப் இயக்குனர் யார் என்றால், இன்றைய தேதிக்கு அட்லீதான்.

“அவர்ட்ட என்னை உதவி இயக்குனரா சேர்த்துவிடுங்க” என்று ஆளுங்கட்சியின் அதிகார மட்டத்தை தட்டுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிற கொடுமையும் நடக்கிறது.

மந்திரிகள் மட்டுமா? பல அரசு உயர் அதிகாரிகளும் கூட, “நம்ம தம்பி... கொஞ்சம் சேர்த்துக்கோங்க” என்று போன் அடிக்கிறார்களாம்.

வேணாம்னும் சொல்ல முடியாம, வேணும்னும் சேர்த்துக்க முடியாம தவியா தவிக்கிறார் அட்லீ.

இப்பவே அவரிடம் பணியாற்றும் சுமார் அரை டஜன் நபர்கள் உயர் மட்ட ரெகமன்ட்டெஷன் என்பதுதான் ஷாக். 

இப்படி உளுந்தே இல்லாம வடை சுட்டு, உரைப்பே வராம தண்ணிக் குடிச்சுகிட்டு இருக்காரு அட்லீ!

BLOG COMMENTS POWERED BY DISQUS