திரைச்செய்திகள்
Typography

அருமையான வாய்ப்பை தவறவிட்டு விட்டாரோ என்று சேரன் மீது கவலை கொள்கிறது கோடம்பாக்கம்.

தற்போது இயக்குனர் சங்கத்தின் தலைவராக ஏக மனதாக தேர்வாகியிருக்கும் பாரதிராஜாவுக்கு அப்பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை. அவர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரப்போவதாகவும் தகவல். இயக்குனர் சங்கத் தலைவராக சேரனை கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என்று பலரும் கருதி வந்த நிலையில்தான் பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொள்ள நுழைந்துவிட்டார் அவர். பொருளாதார கஷ்டத்திலிருக்கும் அவருக்கு இந்த பிக்பாஸ்3 சில பல சவுகர்யங்களை அள்ளிக் கொடுக்கும் போல தெரிகிறது. எனவே சேரன் முடிவு சரியானதே! ஆனால் ஒன்று... ‘இந்த ஆட்டோகிராஃப் ஹீரோ மீட்டருக்கு மேல அட்வைஸ் பண்ணியே கொல்றாருப்பா’ என்று கூக்குரல் ஒலிக்காமல் பிக் பாஸ் வீடு அடங்கப் போவதில்லை!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்