திரைச்செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் நடக்காது என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிய அத்தனை பேரும், போன வேகத்திலேயே திரும்பி ஓடி வந்தார்கள்.

கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டதே காரணம். ஆனால் தேர்தல் நடப்பதற்கான அரென்ஜ்மென்ட்ஸ் அப்பளம் போல நொறுங்கி நூறாகிவிட்டது. தபால் வாக்குகள் பலருக்கும் போய் சேரவும் இல்லை. ஆனால் முன்னதாக ஊர் ஊராக போன விஷால் அணி, தபால் ஓட்டுகளை கண் முன்னே குத்த வைத்து, அதை கண் முன்னே போஸ்ட் பண்ணவும் வைத்துவிட்டுதான் சென்னை திரும்பினார்கள். எனவே வெற்றி விஷால் அணிக்கே என்பதுதான் இப்போதைய நிலவரம். இந்த தேர்தலில் ஜெயிக்க வழி? ரிசல்ட்டே வராமல் செய்துவிடுவதுதான். ஐசரி கணேஷ் தரப்பு ஆளுங்கட்சியிடம் பேசி, பெரிய முற்றுப்புள்ளிக்கு ஏற்பாடு செய்து வருகிறதாம். வேர்ல சர்க்கரைய கரைச்சு ஊத்துனாலும், வேப்பிலை இனிக்காதே ராசா!