திரைச்செய்திகள்

இந்தியன் 2 படுத்த படுக்கையாகிவிட்டது.

இனி ஷங்கர் என்ன செய்யப் போகிறார்? இந்த கேள்வியோடு சுற்றி வருகிற பலருக்கும் ஒரு விஷயம் தெரியாது. முதல்வன் 2 படத்தை அவர் தூசு தட்டிக் கொண்டிருக்கிறார் என்று. இதில் நடிக்க விஜய்யிடம் பேசி வருவதாகவும் தகவல். இதற்கிடையில் பாகுபலி புகழ் பிரபாஸ், “நான் ரெடி. வாங்க” என்று ஷங்கரை அழைத்ததாகவும் தகவல். பிரபாஸ்சா? விஜய்யா? பெரும் தவிப்பில் இருக்கும் ஷங்கரை, “இந்தியன் 2 போனாலென்ன... பிரஷ்ஷா ஒரு படம் பண்ணலாம்” என்று நெருக்க ஆரம்பித்திருக்கிறாராம் கமல். வீட்டை சுற்றி நீரோட்டம். ஆனால் விக்கல் நிக்கலையே யாருக்கும்?