திரைச்செய்திகள்

விஜய் படமா, பிரபாஸ் படமா? இப்படியொரு பெரும் குழப்பத்திலிருந்த ஷங்கருக்கு ஒரு தெளிவு கிடைத்துவிட்டது.

பாகுபலி ராஜாவான பிரபாஸ்தான் அவரது முதல் சாய்ஸ்! ஏற்கனவே அவருக்கு கதை சொல்லி, அவரும் தயாராக இருப்பதால் பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. மீதி கிணறுக்குதான் முக்கல் திக்கல்! இந்தியன் 2 படத்தில் ஏகப்பட்ட கோடிகளை இன்வெஸ்ட் செய்த லைகா, “எங்களுக்கு ஒரு நியாயமான பதிலை சொல்லிட்டு எங்க வேணா போங்க” என்று கூறிவிட்டதாம். “என் அக்கவுன்ட்டில் வந்த அட்வான்சை வேண்டுமானால் திருப்பித் தருகிறேன். கமல் கணக்கை நீங்க பார்த்துக்கோங்க” என்கிறாராம் இவர். இது ஒருபுறம் இருக்க... பிரபாஸ் படத்தை தயாரிக்கும் பென் மீடியா, மும்பையில் மிகப்பெரிய நிறுவனம். இந்தப்படத்திற்காக 300 கோடிக்கு மேல் இறக்கப் போகிறதாம். ஷங்கர், ஏழை விவசாயிகளின் கதையை படமாக எடுத்தால் கூட கோவணத்தை பட்டு துணியால் செய்து தங்கத்தில் ஜரிகை வைப்பார் போலிருக்கிறதே?