திரைச்செய்திகள்
Typography

லிங்குசாமிக்கு சுக்கிர திசை சுற்றி சுற்றி அடிக்கிறது போல. அடுத்தடுத்த தோல்விகளால் அரண்டு போயிருந்தவரை தானே அழைத்து கதை கேட்ட லாரன்ஸ், “நானிருக்கேன். கால்ஷீட் தர்றேன்” என்று கூறியது சற்றே ஓல்டு ஸ்டோரி.

திடீரென லிங்குவை அழைத்த விக்ரம், “மகாவீர் கர்ணா என்கிற படத்தை டிராப் பண்ணிட்டேன். அந்த தேதிகள் கையில இருக்கு. சேர்ந்து படம் பண்ணுவோமா?” என்றாராம். ஒரு பெரிய நிறுவனம் இவ்விருவரையும் நம்பி கோடிகளை கொட்டவும் தயாராகிவிட்டது. ஏற்கனவே பீமா என்கிற படு தோல்வி படத்தை கொடுத்தவர்தான் லிங்கு. அப்படியிருந்தும் விக்ரம் இப்படியொரு முடிவை எடுத்தது ஏன்? இதுதான் இன்டஸ்ட்ரியின் இம்பார்ட்டன்ஸ் கேள்வி!

BLOG COMMENTS POWERED BY DISQUS